நீட், ஜேஇஇ தேர்வுகளை தள்ளிவைக்க கோரிய மனுக்களை தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம்
Representative image/PTIநீட், ஜேஇஇ தேர்வுகள் ஏற்கனவே அறிவித்த தேதிகளில் திட்டமிட்ட படி நடைபெறும் உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
புதுடெல்லி,
மருத்துவ படிப்புகளுக்கான நுழைவுத்தேர்வான நீட் , வரும் செப்டம்பர் மாதம் 13 ஆம் தேதி நடத்தப்படும் என்று மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகம் அறிவித்தது. அதேபோல் ஜேஇ இ தேர்வுகள் செப்டமர் 1 ஆம் தேதி முதல் 6 ஆம் தேதி வரை நடைபெறும் என மனித வள அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நீட் , ஜேஇ இ தேர்வுகளை தள்ளிவைக்க கோரி 11 மாணவர்கள் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
தேர்வை தள்ளி வைப்பதால் மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கப்படும் எனக்கூறிய உச்ச நீதிமன்றம், கொரோனாவால் வாழ்க்கை ஓட்டத்தை நிறுத்திவிட முடியாது. அனைத்து தடுப்பு நடவடிக்கைகளுடன் நகர்ந்து தான் ஆக வேண்டும். ஓராண்டை இழப்பதற்கு மாணவர்கள் தயாராக உள்ளனரா? எனவும் கேள்வி எழுப்பியது.
Related Tags :
Next Story






