பினராயி விஜயன் தலைமையிலான கேரள அரசுக்கு எதிராக காங்கிரஸ் கட்சி நம்பிக்கையில்லா தீர்மானம்!


பினராயி விஜயன் தலைமையிலான கேரள அரசுக்கு எதிராக காங்கிரஸ் கட்சி நம்பிக்கையில்லா தீர்மானம்!
x
தினத்தந்தி 21 Aug 2020 11:00 AM GMT (Updated: 21 Aug 2020 11:00 AM GMT)

முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான கேரள அரசுக்கு எதிராக காங்கிரஸ் கட்சி திங்கட்கிழமை நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருகிறது.

திருவனந்தபுரம்

கேரள மாநில எதிர்க்கட்சித் தலைவர் (காங்கிரஸ் ) ரமேஷ் சென்னிதாலா கூறியதாவது:-  முதலமைச்சர் பினராயி விஜயன் மீது ஊழல் குற்றச்சாட்டுகளை முன்வைத்து,அரசுக்கு எதிராக வரும் திங்கட்கிழமை 24ந்தேதி  சட்டப்பேரவையில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருகிறோம்.  லைஃப் மிஷனுக்குப் பின்னால் சட்டவிரோத ஒப்பந்தங்கள் குறித்து மக்களிடம் பொய் சொல்கிறார். கடந்த 4 ஆண்டுகளாக ஊழல் அதிகரித்து உள்ளது என கூறினார் 

ரெட் கிரசண்ட் மற்றும் யூனிடாக் இடையேயான ஒப்பந்தத்தின் ஒவ்வொரு கட்டத்திலும் ஈடுபட்டிருந்தார் என்பது இப்போது தெளிவாகியுள்ளது என்று சென்னிதாலா ஒரு டுவீட்டில் தெரிவித்துள்ளார்.

உள்ளூர் ஊடகங்கள் திங்களன்று நம்பிக்கையில்லா தீர்மான விவாதத்திற்கு ஐந்து மணி நேரம் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தன. இந்த கலந்துரையாடல் காலை 10 மணி முதல் மாலை 3 மணி வரை நடைபெற உள்ளது. நம்பிக்கையில்லா தீர்மானத்தின் பின்னணியில் தங்கக் கடத்தல் வழக்கும் மையமாக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


Next Story