பிரணாப் முகர்ஜி உடல்நிலையில் எந்த முன்னேற்றமும் இல்லை - டெல்லி ராணுவ மருத்துவமனை


கோப்புக்காட்சி
x
கோப்புக்காட்சி
தினத்தந்தி 22 Aug 2020 1:14 PM IST (Updated: 22 Aug 2020 1:14 PM IST)
t-max-icont-min-icon

பிரணாப் முகர்ஜி உடல்நிலையில் எந்த முன்னேற்றமும் இல்லை என டெல்லி ராணுவ மருத்துவமனை தெரிவித்துள்ளது.

புதுடெல்லி,

முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் மூளையில் உறைந்த ரத்த கட்டியை அகற்ற டெல்லியில் உள்ள ஆர்.ஆர்.ராணுவ ஆஸ்பத்திரியில் ஆபரேஷன் நடந்தது.

மேலும் அவருக்கு கொரோனா தொற்றும் உறுதி செய்யப்பட்டது. அவர் கோமா நிலைக்கு சென்றதால் வென்டிலேட்டர் உதவியுடன் டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள். நேற்று அவரது உடல்நிலையில் லேசான முன்னேற்றம் ஏற்பட்டது.

இந்நிலையில் முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் உடல்நிலையில் எந்த முன்னேற்றமும் இல்லை என ராணுவ ஆராய்ச்சி மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

 மேலும் வென்டிலேட்டர் மூலம் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்படுவதாகவும்,  முக்கிய உறுப்புகளின் செயல்பாடுகளை கண்காணித்து டாக்டர்கள் உரிய சிகிச்சை அளித்து வருவதாகவும் மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
1 More update

Next Story