143 பேர் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக இளம் பெண் புகார்


143 பேர் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக இளம் பெண் புகார்
x
தினத்தந்தி 22 Aug 2020 8:48 AM GMT (Updated: 22 Aug 2020 8:48 AM GMT)

கடந்த சில ஆண்டுகளில் 143 பேர் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக ஒரு இளம் பெண் குற்றம் சாட்டியுள்ளார். அவர் அளித்த புகார் தொடர்பாக போலீசார் நேற்று வழக்கு பதிவு செய்து உள்ளனர்.

ஐதராபாத்

தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தை சேர்ந்த பெண் ஒருவர் புஞ்சகுட்டா போலீஸ் நிலையத்தில் புகார் ஒன்று  அளித்துள்ளார். புகாரில் அவர் கடந்த 2010 ஆம் ஆண்டு எனக்கு திருமணம் நடந்தது.  திருமணமான ஒரு வருடத்திற்குள் என விவாகரத்து கொடுக்கப்பட்டது. விவாகரத்து பெற்ற எனது கணவரின் குடும்பத்தில் உள்ள சில உறுப்பினர்கள்என்னை பாலியல் ரீதியாக துன்புறுத்தினர். கடந்த 25 ஆண்டுகளில் தன்னை 143 பேர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கி உள்ளதாக கூறி உள்ளார். 

இந்த புகாரை தொடர்ந்து போலீசார் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.

சுமார் 42 பக்கங்களுக்கு எப்ஐஆர் போடப்பட்டுள்ளது.இதில் 41 பக்கத்தில் 143 பேரின் விவரங்கள் குறிப்பிடப்பட்டு உள்ளது.அதில்சில பெண்களும் இடம்பெற்று உள்ளனர். அந்தப் பெண் மருத்துவ பரிசோதனைக்கும் தற்போது அனுப்பி வைக்கப்பட்டு உள்ளார்.

அரசியல் பின்னணி உள்ளவர்கள், மாணவர் தலைவர்கள், ஊடககத்தை சேர்ந்தவர்கள், திரைப்படம் மற்றும் பிற தொழில்களைச் சேர்ந்தவர்கள் எனக் கூறப்படும் பிரபலங்கள் மீது அந்த பெண் புகார் அளித்துள்ளார்.
 
புஞ்சகுட்ட போலீஸ் அதிகாரி ஒருவர் கூறும் போது பெண் அளித்துள்ள புகாரை தொடர்ந்து நாங்கள் வழக்குப்பதிவு செய்துள்ளோம். மேலும் குற்றவாளிகளையும் விசாரித்து வருகிறோம் என கூறினார்.

Next Story