விமான நிலையம் தனியார் மயமாக்க எதிர்ப்பு - பிரதமருக்கு 2 லட்சம் இ-மெயில் அனுப்ப மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு முடிவு


விமான நிலையம் தனியார் மயமாக்க எதிர்ப்பு - பிரதமருக்கு 2 லட்சம் இ-மெயில் அனுப்ப மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு முடிவு
x
தினத்தந்தி 22 Aug 2020 7:11 PM GMT (Updated: 22 Aug 2020 7:11 PM GMT)

திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலையத்தை தனியார் மயமாக்கும் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து பிரதமர் மோடிக்கு 2 லட்சம் இ-மெயில்கள் அனுப்பப்படும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி தெரிவித்துள்ளது.

திருவனந்தபுரம்,

கேரள மாநிலம் திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலையத்தை தனியார் வசம் ஒப்படைக்க மத்திய அரசு முடிவு செய்து உள்ளது. இதற்கு ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளது. மத்திய அரசின் இந்த முடிவை செயல்படுத்த கேரள அரசு ஒத்துழைப்பு அளிக்காது என்று முதல்-மந்திரி பினராயி விஜயன் பிரதமர் நரேந்திர மோடிக்கு ஏற்கனவே கடிதம் எழுதி உள்ளார்.

இந்த விவகாரம் தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் கொடியேரி பாலகிருஷ்ணன் நேற்று அளித்த பேட்டியில், திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலையத்தை தனியார் மயமாக்கும் மத்திய அரசின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து பிரதமர் நரேந்திர மோடிக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் 2 லட்சம் இ-மெயில்கள் அனுப்பப்படும் என்று தெரிவித்துள்ளார்.

Next Story