காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் பொறுப்பில் இருந்து விலக சோனியா காந்தி முடிவு ?


காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் பொறுப்பில் இருந்து  விலக சோனியா காந்தி முடிவு ?
x
தினத்தந்தி 23 Aug 2020 11:42 AM GMT (Updated: 23 Aug 2020 11:42 AM GMT)

காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் பொறுப்பில் இருந்து சோனியா காந்தி விலக முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

புதுடெல்லி

கடந்த நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி தோல்வியை சந்தித்தையடுத்து ராகுல் காந்தி தலைவர் பொறுப்பில் இருந்து விலகினார். இதையடுத்து கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 10 ஆம் தேதி, கட்சிக்கு புதிய தலைவர் தேர்வு செய்யப்படும் வரை இடைக்கால தலைவராக சோனியா காந்தி பொறுப்பு ஏற்றுக்கொண்டார். 

காங்கிரஸ் கட்சியின் காரிய கமிட்டி கூட்டம் நாளை நடைபெற உள்ளது. இந்த நிலையில், சோனியா காந்தி இடைக்கால தலைவர் பொறுப்பில் இருந்து விலக  முடிவு செய்திருப்பதாக  தகவல் வெளியாகியுள்ளது. 

கட்சியின் அமைப்புகளை முழுமையாக மாற்றியமைக்க வலியுறுத்தி காங்கிரஸ் மூத்த தலைவர்கள் கடிதம் எழுதியிருந்தனர். இந்தகடிதத்திற்கு பதில் அனுப்பியுள்ள சோனியா காந்தி,  அனைவரும் கூட்டாக புதிய தலைவரை தேர்வு செய்வோம் எனவும் தலைவர் பொறுப்பில் தொடர்ந்து நீடிக்க தான் விரும்பவில்லை எனக் கூறியிருப்பதாகவும் கட்சி வட்டார தகவல்கள் கூறுகின்றன.


Next Story