மராட்டியத்தில் நிலநடுக்கம்; ரிக்டரில் 2.8 ஆக பதிவு


மராட்டியத்தில் நிலநடுக்கம்; ரிக்டரில் 2.8 ஆக பதிவு
x
தினத்தந்தி 4 Sept 2020 3:27 PM IST (Updated: 4 Sept 2020 3:27 PM IST)
t-max-icont-min-icon

மராட்டியத்தின் மும்பைக்கு வடக்கே இன்று மித அளவிலான நிலநடுக்கம் உணரப்பட்டு உள்ளது.

மும்பை,

மராட்டிய மாநிலத்தில் இன்று காலை மித அளவிலான நிலநடுக்கம் உணரப்பட்டு உள்ளது.  இந்த நிலநடுக்கம் மும்பையில் இருந்து வடக்கே 91 கிலோ மீட்டர் தொலைவில் 10 கிலோ மீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்தது.

இது ரிக்டர் அளவில் 2.8 ஆக பதிவாகி உள்ளது என தேசிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்து உள்ளது.  இந்நிலநடுக்கத்தினால் பொதுமக்கள் சற்றே அதிர்ச்சி அடைந்தனர்.  எனினும், இதனால் ஏற்பட்ட சேதவிவரங்கள் எதுவும் வெளியாகவில்லை.

Next Story