கொரோனாவில் இருந்து மீண்ட 5 நாளில் பா.ஜனதா எம்.பி.க்கு மீண்டும் தொற்று
கொரோனாவில் இருந்து மீண்ட 5 நாளில், பா.ஜனதா எம்.பி.க்கு மீண்டும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
லக்னோ,
உத்தரபிரதேசத்தில் மக்கள் பிரதிநிதிகள் கொரோனாவால் அதிக அளவில் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அந்த மாநிலத்தை சேர்ந்த பாரதீய ஜனதா எம்.பி. கவுசல் கிஷோர் கடந்த மாதம் (ஆகஸ்டு) கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருந்தார். ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு பின் குணமடைந்து 5 நாட்களுக்கு முன் வீடு திரும்பினார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் அவருக்கு திடீரென கடுமையான காய்ச்சல் மற்றும் சுவாச பிரச்சினை ஏற்பட்டது. இதையடுத்து, மீண்டும் அவர் கொரோனா பரிசோதனை செய்து கொண்டார். இதில், அவர் இரண்டாவது முறையாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து மறுபடியும் அவர் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.
Related Tags :
Next Story