சவுதி அரேபியா மன்னருடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை
பிரதமர் நரேந்திர மோடி சவுதி அரேபிய மன்னர் சல்மானுடன், தொலைபேசி வயிலாக உரையாடினார்.
புதுடெல்லி,
பிரதமர் நரேந்திர மோடி சவுதி அரேபிய மன்னர் சல்மானுடன், தொலைபேசி வயிலாக உரையாடினார். அப்போது, இரு தலைவர்களும் கொரோனா தொற்றால் உலகளாவிய அளவில் ஏற்பட்டுள்ள சவால்கள் குறித்து, கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டனர்.
அப்போது, சவூதியில் உள்ள இந்தியர்களுக்கு, ஆதரவு அளித்த மன்னருக்கு, பிரதமர் மோடி நன்றி தெரிவித்தார். இதைதொடர்ந்து இருதரப்பு உறவுகள் குறித்தும் இருவரும் பேசிய நிலையில், ஜி 20 மாநாடு குறித்தும் விவாதித்ததாக, பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Tags :
Next Story