ராஜஸ்தான்: படகு ஆற்றில் கவிழ்ந்து 14 பேர் உயிரிழப்பு


ராஜஸ்தான்: படகு ஆற்றில் கவிழ்ந்து 14 பேர் உயிரிழப்பு
x
தினத்தந்தி 16 Sep 2020 12:00 PM GMT (Updated: 16 Sep 2020 12:00 PM GMT)

ராஜஸ்தான் மாநிலம் கோடா மாவட்டத்தில் படகு ஆற்றில் கவிழ்ந்ததில் 14 பேர் உயிரிழந்திருக்கலாம் என கூறப்படுகிறது.

ஜெய்ப்பூர்

ராஜஸ்தான் மாநிலம் இந்தர்கர் பகுதியிலுள்ள சிவன் கோவிலுக்கு 45க்கும் மேற்பட்ட பக்தர்கள் சம்பல் நதியில் படகில் சென்றனர். அப்போது எதிர்பாரதவிதமாக படகு கவிழ்ந்துள்ளது. இதில் 25 பேர் வரை நீந்திக் கரை சேர்ந்து விட்ட்னர் 20 பேரை காணவில்லை. 

 3 பேரின் உடல்கள் மட்டும் மீட்கப்பட்டுள்ள நிலையில், 14 பேர் வரை பலியாகி இருக்கலாம் என கூறப்படுகிறது. தொடர்ந்து தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது. பக்தர்களை ஏற்றிச் சென்ற படகின் தகுதிச் சான்று இன்னும் புதுப்பிக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. 25 பேர் பயணிக்க கூடிய படகில் 45 பேர் பயணம் செய்து உள்ளனர்.

Next Story