மாநிலங்களவை கூட்டத்தில் பங்கேற்காமல் இருக்க மன்மோகன் சிங், ப.சிதம்பரம் உள்பட 14 எம்.பி.க்களுக்கு விடுமுறை


மாநிலங்களவை கூட்டத்தில் பங்கேற்காமல் இருக்க மன்மோகன் சிங், ப.சிதம்பரம் உள்பட 14 எம்.பி.க்களுக்கு விடுமுறை
x
தினத்தந்தி 16 Sep 2020 9:45 PM GMT (Updated: 16 Sep 2020 10:23 PM GMT)

மாநிலங்களவை கூட்டத்தில் பங்கேற்காமல் இருக்க மன்மோகன் சிங், ப.சிதம்பரம் உள்பட 14 எம்.பி.க்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

புதுடெல்லி, 

நாட்டில் கொரோனா பரவல் தீவிரமாக இருந்து வரும் நிலையில் நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத் தொடர் கடந்த திங்கட்கிழமை தொடங்கி பல்வேறு கட்டுப்பாடுகள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் உடல் நல பிரச்சினைகளை கருத்தில் கொண்டு கூட்டத்தில் பங்கேற்காமல் இருக்க, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், முன்னாள் நிதி மந்திரி ப.சிதம்பரம், ஆஸ்கர் பெர்னாண்டஸ் (மூவரும் காங்கிரஸ்), ஏ.நவநீத கிருஷ்ணன் (அ.தி.மு.க.), டாக்டர் அன்புமணி ராமதாஸ் (பா.ம.க.), டாக்டர் நரேந்திர ஜாதவ் (சுயே.), மனஸ் ரஞ்சன் புனியா (இருவரும் திரிணாமுல் காங்கிரஸ்), பரிமால் நத்வானி (ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ்), சுசில் குப்தா (ஆம் ஆத்மி), ஹிஷே லச்சுங்பா (எஸ்.டி.எப்.), வி.லட்சுமிகாந்த ராவ், பந்த பிரகாஷ் (இருவரும் தெலுங்கானா ராஷ்டிர சமிதி), மகேந்திர பிரசாத் (ஐக்கிய ஜனதா தளம்), கே.ஜி.கென்யே (என்.பி.எப்.) ஆகிய 14 மாநிலங்களவை எம்.பி.க்கள் தங்களுக்கு விடுமுறை அளிக்குமாறு கேட்டுக் கொண்டு இருந்தனர்.

அவர்களுடைய கோரிக்கையை ஏற்று மாநிலங்களவை அவர்களுக்கு விடுமுறை அளித்து உள்ளது.

இவர்களில் 11 பேர் தங்கள் வயது பிரச்சினையை கருத்தில் கொண்டு, இந்த கூட்டத் தொடர் முழுவதும் சபைக்கு வராமல் இருக்க விடுமுறை அளிக்குமாறு கேட்டுக்கொண்டு இருந்தனர்.


Next Story