கிழக்கு லடாக்கில் சீன துருப்புகள் துப்பாக்கியால் சுட்டன -புதிய தகவல்


கிழக்கு லடாக்கில் சீன துருப்புகள் துப்பாக்கியால் சுட்டன -புதிய தகவல்
x
தினத்தந்தி 16 Sep 2020 11:01 PM GMT (Updated: 16 Sep 2020 11:01 PM GMT)

கிழக்கு லடாக்கில் சீன துருப்புகள் துப்பாக்கியால் சுட்டதாக புதிய தகவல் வெளியாகி இருக்கிறது.

புதுடெல்லி, -

கிழக்கு லடாக்கில் அசல் எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதியில், பங்கோங் சோ ஏரியின் வடக்கு கரையில், இந்தியாவின் முன்னேறிய நிலையை நோக்கி சீன துருப்புகள் கடந்த வாரம் முன்னேறின. ‘பிங்கர்-4’ என்ற மோதல் பகுதியில் நடந்த இந்த அத்துமீறல் முயற்சியை அங்கு குவிக்கப்பட்டிருந்த இந்திய ராணுவம் வெற்றிகரமாக முறியடித்தது.

அதைத் தொடர்ந்து, ஆக்ரோஷமாக ஆயுதங்களுடன் வந்த சீன துருப்புகள் பின்வாங்கி திரும்பிச் சென்றன. அப்போது அவர்கள் இந்திய படை வீரர்களை அச்சுறுத்துவதற்காக 100-200 ரவுண்டுகள் துப்பாக்கியால் சுட்டனர்.

இதை நேரில் கண்ட வட்டாரங்கள் நேற்று தெரிவித்தன. சீனாவின் இந்த அத்துமீறல், மாஸ்கோவில் மத்திய வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர், சீன வெளியுறவு மந்திரி வாங் யியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துதற்கு முன்பு நடந்ததாகும்.

Next Story