மதுரை ஸ்மார்ட் சிட்டி திட்டத்தை விரைவுப்படுத்த வெங்கடேசன் எம்.பி. நாடாளுமன்றத்தில் வலியுறுத்தல்
மதுரையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தை விரைவுப்படுத்த வேண்டும் என்று அத்தொகுதி எம்.பி. வெங்கடேசன் நாடாளுமன்றத்தில் கோரிக்கை விடுத்துள்ளார்.
புதுடெல்லி,
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த 14ந்தேதி தொடங்கி நடந்து வருகிறது. இதில் பல்வேறு விவகாரங்களை இரு அவை உறுப்பினர்களும் எழுப்பி வருகின்றனர். நாடாளுமன்ற கூட்டத்தொடரில் இன்று இரு அவைகளிலும் உறுப்பினர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தனர். மக்களவையில், காங்கிரஸ் எம்.பி. கே. சுரேஷ், கேரளாவில் மாநில யூனியன் மற்றும் இளைஞர் காங்கிரஸ் தொண்டர்களின் போராட்டத்தில் போலீசார் நடத்திய தடியடி விவகாரத்தில் அவை ஒத்திவைப்பு தீர்மான நோட்டீசை வழங்கினார்.
இதேபோன்று, மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியின் எம்.பி. வெங்கடேசன், மதுரையில் ஸ்மார்ட் சிட்டி திட்டம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பினார். இதற்கு மத்திய நகர்ப்புற மந்திரி ஹர்தீப் சிங் பூரி அளித்துள்ள பதிலில், கடந்த 2016ம் ஆண்டில் அறிவிக்கப்பட்ட மதுரை ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் ரூ.977 கோடி மதிப்பீட்டில் அறிவிக்கப்பட்ட 14 திட்டங்களில், ரூ.12 கோடி செலவிலான ஒரு திட்டம் முடிந்துள்ளதாக தெரிவித்துள்ளார். மற்ற திட்ட பணிகளை துவங்க வேலை ஆணை வழங்கப்பட்டுள்ளதாகவும், அவை 5 ஆண்டுகளில் முடிவடையுமென எதிர்பார்ப்பதாகவும் மந்திரி கூறியதாக வெங்கடேசன் எம்.பி. தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story