குஜராத் முன்னாள் முதல்-மந்திரிக்கு கொரோனா பாதிப்பு உறுதி


குஜராத் முன்னாள் முதல்-மந்திரிக்கு கொரோனா பாதிப்பு உறுதி
x
தினத்தந்தி 19 Sept 2020 6:24 AM IST (Updated: 19 Sept 2020 6:24 AM IST)
t-max-icont-min-icon

குஜராத் முன்னாள் முதல்-மந்திரிக்கு கொரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது.

காந்திநகர், 

குஜராத் மாநில முன்னாள் முதல்-மந்திரி கேசுபாய் பட்டேலுக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது. உதவியாளர் ஒருவருக்கு நேற்றுமுன்தினம் தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து 92 வயது கேசுபாய் பட்டேலுக்கும் ஆன்டிஜென் மற்றும் ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனை செய்யப்பட்டது. இதில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து, டாக்டர்கள் அறிவுரையின் பேரில் காந்தி நகரில் உள்ள தனது வீட்டில் கேசுபாய் பட்டேல் தன்னை தனிமைப்படுத்தி கொண்டுள்ளதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

Next Story