தேசிய செய்திகள்

கர்நாடக துணை முதல் மந்திரிக்கு கொரோனா தொற்று உறுதி + "||" + Karnataka Deputy Chief Minister confirmed corona infection

கர்நாடக துணை முதல் மந்திரிக்கு கொரோனா தொற்று உறுதி

கர்நாடக துணை முதல் மந்திரிக்கு கொரோனா தொற்று உறுதி
கர்நாடக துணை முதல் மந்திரி அஷ்வத் நாராயணுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.
பெங்களூரு,

கர்நாடகாவில் முதல் மந்திரி எடியூரப்பா தலைமையில் பா.ஜ.க. ஆட்சி நடந்து வருகிறது.  அவரது அரசில் துணை முதல் மந்திரியாக அஷ்வத் நாராயண் இருந்து வருகிறார்.  இந்நிலையில், அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.

இதுபற்றி அஷ்வத் டுவிட்டரில் வெளியிட்டு உள்ள செய்தியில், சட்டசபை கூட்டத்தொடர் வரவுள்ள நிலையில், கொரோனா பரிசோதனை செய்து கொண்டேன்.

அதன் முடிவு வெளிவந்துள்ளது.  அதில் எனக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது.  எனக்கு அறிகுறிகள் எதுவுமில்லை.  நான் வீட்டிலேயே என்னை தனிமைப்படுத்தி கொள்வேன்.

என்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து கொள்ளும்படி வேண்டி கேட்டு கொள்கிறேன் என்று தெரிவித்து உள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. தெலுங்கு பட பிரபல நடிகர் ராஜசேகர், மனைவிக்கு கொரோனா பாதிப்பு உறுதி
தெலுங்கு படவுலகின் பிரபல நடிகர் ராஜசேகர், அவரது மனைவி மற்றும் குடும்பத்தினருக்கு கொரோனா பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டு உள்ளது.
2. வரும் சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று புதுவையில் காங்கிரஸ் தலைமையிலான ஆட்சி தான் அமையும் நாராயணசாமி உறுதி
புதுவையில் வரும் சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று காங்கிரஸ் தலைமையிலான மதசார்பற்ற கூட்டணி கட்சிகள் தான் ஆட்சியமைக்கும் என்று முதல்-அமைச்சர் நாராயணசாமி கூறினார்.
3. முன்னாள் அமைச்சர் கோகுல இந்திராவுக்கு கொரோனா பாதிப்பு
முன்னாள் அமைச்சர் கோகுல இந்திராவுக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது.
4. கம்யூனிஸ்டு கட்சி (எம்) மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணனுக்கு கொரோனா பாதிப்பு
கொரோனா பாதித்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன் சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
5. கேரளாவில் மின்சார துறை மந்திரிக்கு கொரோனா உறுதி
கேரளாவில் மின்சார துறை மந்திரிக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது.