காஷ்மீரில் பயங்கரவாதத்தினை ஊக்குவிக்க பாகிஸ்தான் அனைத்து வழியிலும் முயற்சிக்கிறது; காஷ்மீர் டி.ஜி.பி. பேட்டி
காஷ்மீரில் பயங்கரவாதத்தினை ஊக்குவிக்க பாகிஸ்தான் அனைத்து வழியிலும் முயற்சிக்கிறது என காஷ்மீர் டி.ஜி.பி. தில்பாக் சிங் பேட்டியில் இன்று கூறியுள்ளார்.
ஜம்மு,
காஷ்மீர் டி.ஜி.பி. தில்பாக் சிங் செய்தியாளர்களுக்கு இன்று அளித்த பேட்டியில், ஜம்மு மற்றும் காஷ்மீரில் டிரோன்களை பறக்க விட்டு ஆயுதங்களை கீழே போட செய்து மாநிலத்தில் அமைதியை சீர்குலைக்க பாகிஸ்தான் முயற்சி செய்து வருகிறது.
அவர்கள் பயங்கரவாதிகளை ஊடுருவ செய்யும் முயற்சியிலும் ஈடுபட்டு வருகின்றனர். ஆயுதங்களை டிரோன்களை கொண்டு கீழே போட செய்வது எங்களுக்கு சவாலானது. ஆனால், இதுபோன்ற நடவடிக்கைகளை நாங்கள் கட்டுப்படுத்தி உள்ளோம். அவற்றில் சில வெற்றிகளையும் பெற்றுள்ளோம்.
பயங்கரவாத குழுக்களுக்கு அனைத்து வகையிலும் ஆதரவளித்து ஒவ்வொரு சாத்தியப்பட்ட வழியிலும் காஷ்மீரில் பயங்கரவாதத்தினை ஊக்குவிக்க பாகிஸ்தான் முயற்சிக்கிறது. போதை பொருட்கள் கடத்தல்காரர்களை ஒடுக்க நாங்கள் கடுமையாக போராடி வருகிறோம்.
பாகிஸ்தான் அரசு பயங்கரவாத நிதிக்கு போதை பொருட்களை பயன்படுத்துகிறது என்று காஷ்மீர் டி.ஜி.பி. கூறியுள்ளார்.
Related Tags :
Next Story