மராட்டிய மாநிலத்தில் இன்று 198 போலீசாருக்கு கொரோனா தொற்றி உறுதி


மராட்டிய மாநிலத்தில் இன்று 198 போலீசாருக்கு கொரோனா தொற்றி உறுதி
x
தினத்தந்தி 20 Sep 2020 1:51 PM GMT (Updated: 2020-09-20T19:21:36+05:30)

மராட்டிய மாநிலத்தில் இன்று 198 போலீசாருக்கு கொரோனா தொற்றி உறுதி செய்யப்பட்டுள்ளது.

மும்பை,
 
நாட்டிலேயே கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ள மாநிலமான மராட்டியத்தில், முன்கள பணியாளர்களான போலீசாரும் அதிக அளவில் தொற்று பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். இந்நிலையில் இன்றைய நிலவரப்படி மராட்டியத்தில் புதிதாக 198 போலீசாருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அங்கு இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்ட போலீசாரின் மொத்த எண்ணிக்கை 21,152 ஆக அதிகரித்துள்ளது.

இதனிடையே தொற்று பாதிப்பில் இருந்து இதுவரை 17,295 போலீசார் குணமடைந்துள்ள நிலையில், இன்று வரை மொத்தம் 217 போலீசார் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். தற்போது மராட்டிய காவல்துறையில் 3,640 பேர் கொரோனா பாதிப்பிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Next Story