தூதரக அதிகாரியாக ஜெயந்த் கோப்ரகடே நியமனம்: பாகிஸ்தான் விசா வழங்க மறுப்பு - இந்தியா கண்டனம்


தூதரக அதிகாரியாக ஜெயந்த் கோப்ரகடே நியமனம்: பாகிஸ்தான் விசா வழங்க மறுப்பு - இந்தியா கண்டனம்
x
தினத்தந்தி 20 Sep 2020 5:22 PM GMT (Updated: 20 Sep 2020 5:22 PM GMT)

இந்திய தூதரகத்தின் பொறுப்பு அதிகாரியாக ஜெயந்த் கோப்ரகடே நியமனம் செய்யப்பட்டதை ஏற்காமல், அவருக்கு பாகிஸ்தான் விசா வழங்க மறுத்துள்ளது. இதற்கு இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது.

புதுடெல்லி,

பாகிஸ்தானுக்கான இந்திய தூதராகத்தின் பொறுப்பு அதிகாரியாக ஜெயந்த் கோப்ரகடைவை இந்தியா முன்மொழிந்தது. ஆனால், இதனை பாகிஸ்தான் ஏற்றுகொள்ள மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது. மேலும் அவருக்கு விசா வழங்க மறுத்து விட்டது.

பாகிஸ்தானில் தூதரக அதிகாரிகளின் எண்ணிக்கை குறைந்த நிலையில், மிகவும் மூத்த அதிகாரியான கோப்ரகடே நியமனம் செய்யப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள மத்திய அரசு, இந்திய தூதர்களை நியமனம் செய்வதில் பாகிஸ்தான் உத்தரவிட முடியாது. பாகிஸ்தானின் நடவடிக்கைக்கு உரிய பதிலடி கொடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

1995ம் ஆண்டு ஐ.எப்எஸ்., அதிகாரியான ஜெயந்த் கோப்ரகடே, தற்போது, அணுசக்தி துறையில் இணை செயலாளராக பணியாற்றி வருகிறார். கடந்த காலங்களில் அவர் கிர்கிஸ்தான் தூதராகவும், ரஷ்யா, ஸ்பெயின், கஜகஸ்தானில் துணை தூதராகவும் பணியாற்றியுள்ளார். பாகிஸ்தானிலும் பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story