தேசிய செய்திகள்

நாடு முழுவதும் பகுதி வாரியாக பள்ளிகள் திறப்பு; ஆசிரியர்கள்-மாணவர்கள் சந்திப்பு + "||" + Opening of area wise schools across the country; Teachers, students meeting

நாடு முழுவதும் பகுதி வாரியாக பள்ளிகள் திறப்பு; ஆசிரியர்கள்-மாணவர்கள் சந்திப்பு

நாடு முழுவதும் பகுதி வாரியாக பள்ளிகள் திறப்பு; ஆசிரியர்கள்-மாணவர்கள் சந்திப்பு
நாடு முழுவதும் அரசு அனுமதியுடன் பகுதி வாரியாக திறக்கப்பட்ட பள்ளிகளில் ஆசிரியர்களை மாணவர்கள் மகிழ்ச்சியுடன் சந்தித்து பேசினர்.
புதுடெல்லி,

நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு பரவ தொடங்கிய சூழலில் கடந்த மார்ச் இறுதியில் அனைத்து கல்வி நிறுவனங்களையும் மூடும்படி மத்திய அரசு உத்தரவிட்டது.  இதனால், 10ம் வகுப்பு பொது தேர்வு உள்ளிட்ட பல்வேறு தேர்வுகளும் தள்ளி போடப்பட்டன.

இதன்பின்னர் பல மாநிலங்களில் தேர்வு எழுதிடாமல் மாணவர்கள் தேர்ச்சி பெற்று விட்டனர் என அறிவிப்பு வெளியானது.  தொடர்ந்து ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு வந்த நிலையில், பொருளாதார மந்தநிலை, பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முடக்கம் ஆகியவற்றை சுட்டி காட்டி சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டன.

இந்நிலையில், இந்த மாத தொடக்கத்தில், பள்ளி கூடங்களை பகுதி வாரியாக திறப்பதற்கான நடைமுறை வழிகாட்டிகளை அரசு வெளியிட்டது.  இதன்படி, பெற்றோர் அல்லது காப்பாளர்கள் அளிக்கும் எழுத்துப்பூர்வ ஒப்புதலின்பேரில் 9 முதல் 12ம் வகுப்பு வரையிலான மாணவ மாணவியர்கள் ஆசிரியர்களை சந்தித்து வழிகாட்டுதல்களை பெறலாம் என தெரிவிக்கப்பட்டது.

இதனை அடுத்து நாடு முழுவதும் பல மாநிலங்களில் பகுதி வாரியாக பள்ளிகள் இன்று திறக்கப்பட்டன.  இதன்படி, மாணவ மாணவியர்கள் ஆசிரியர்களை இன்று சந்தித்தனர்.

இதுபற்றி மத்திய பிரதேசத்தின் போபால் நகரில் பள்ளியொன்றில் மாணவர் கூறும்பொழுது, கொரோனா பாதிப்புள்ள சூழலில், எங்களுடைய ஆசிரியர் நல்ல முறையில் ஏற்பாடுகளை செய்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது என கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. கொரேனா தொற்று; மத்திய மந்திரி அமித்ஷா உடன் கெஜ்ரிவால் அடுத்த வாரம் சந்திப்பு
டெல்லியில் கொரோனா பாதிப்பு, காற்று மாசுபாடு ஆகியவை பற்றி கெஜ்ரிவால் அடுத்த வாரம் மத்திய உள்துறை மந்திரி அமித் ஷாவை நேரில் சந்தித்து பேச உள்ளார்.
2. பள்ளிகள் திறப்பு குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பார் - அமைச்சர் செங்கோட்டையன் தகவல்
பள்ளிகளை திறப்பது குறித்த அறிவிப்பை நாளை முதலமைச்சர் வெளியிடுவார் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
3. பள்ளிகள் திறப்பை 4 மாதங்கள் தள்ளி வைக்கலாம் - தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த்
தமிழகத்தில் பள்ளிகள் திறப்பை 4 மாதங்கள் தள்ளி வைப்பதில் தவறில்லை என்று தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
4. பள்ளிகள் திறப்பு குறித்து வரும் 9-ம் தேதி கருத்துக்கேட்பு கூட்டம் - தமிழக அரசு
பள்ளிகள் திறப்பு குறித்து வரும் 9-ம் தேதி கருத்துக்கேட்பு கூட்டம் நடைபெற இருப்பதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.