இரவு முழுவதையும் நாடாளுமன்ற வளாகத்திலேயே கழித்த சஸ்பெண்ட் செய்யப்பட்ட எம்.பிக்கள்
மாநிலங்களவியில் விதிகளை மீறி நடந்து கொண்டதால் எதிர்க்கட்சியை சேர்ந்த 8 எம்.பிக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
புதுடெல்லி,
நாடாளுமன்ற மாநிலங்களவையில் வேளாண் மசோதா தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்ட போது கடும் அமளி ஏற்பட்டது.
எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சிலர் மசோதாக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து குரல் எழுப்பினார்கள். திரிணாமுல் காங்கிரஸ், ஆம் ஆத்மி உள்ளிட்ட சில கட்சிகளின் உறுப்பினர்கள் துணைத் தலைவரின் இருக்கையை முற்றுகையிட்டு கடும் அமளியில் ஈடுபட்டனர்.
அவையில் விதிமுறைகளை மீறி நடந்து கொண்ட உறுப்பினர்கள் 8 பேரை ஒருவாரம் சஸ்பெண்ட் செய்து மாநிலங்களவை தலைவர் வெங்கையா நாயுடு உத்தரவிட்டார்.
இடைநீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து 8 எம்.பிக்களும் நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலை முன்பாக தர்ணாவில் நேற்று ஈடுபட்டனர். இந்த நிலையில், இரவு முழுவதும் காந்தி சிலை முன்பே அமர்ந்த எம்.பிக்கள், தங்கள் மீதான நடவடிக்கை ரத்து செய்யப்படும் வரை இங்கிருந்து செல்ல மாட்டோம் எனவும் உறுதிபட கூறியுள்ளனர்.
Related Tags :
Next Story