நாடாளுமன்ற வளாகத்தில் திமுக எம்.பிக்கள், பிரதமர் மோடியுடன் சந்திப்பு


நாடாளுமன்ற வளாகத்தில் திமுக எம்.பிக்கள், பிரதமர் மோடியுடன் சந்திப்பு
x

டெல்லியில் பிரதமர் மோடியை திமுக எம்.பிக்கள் திடீரென சந்தித்துப்பேசினர்.

புதுடெல்லி,

நாடாளுமன்ற வளாகத்தில் பிரதமர் மோடியை திமுக எம்.பிக்கள் டி ஆர் பாலு, கனிமொழி உள்ளிட்டோர் இன்று  சந்தித்துப்பேசினர். இந்த சந்திப்பின் போது,  காவிரி, மேகதாது விவகாரங்கள்  குறித்து பேசியதாக தெரிகிறது. 

பிரதமரை சந்தித்த பின்னர்  செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்த திமுக எம்.பி டி ஆர் பாலு, “ மேகதாது அணையை கட்ட அனுமதிக்கக் கூடாது என திமுக தலைவர் ஸ்டாலின் எழுதிய கடிதத்தை பிரதமரிடம் வழங்கினோம்.

 தமிழகத்திற்கு பாதகமாக எந்த முடிவையும் மத்திய அரசு எடுக்காது என பிரதமர் உறுதியளித்தார்.  மேகதாது அணையை கட்டக்கூடாது என பழனிசாமி இதுவரை வலியுறுத்தவில்லை” என்றார். 


Next Story