புலனாய்வு பிரிவினர் என கூறி 2 பேர் கேள்வி எழுப்பினர்; தி.மு.க. எம்.பி. கதிர் ஆனந்த் குற்றச்சாட்டு


புலனாய்வு பிரிவினர் என கூறி 2 பேர் கேள்வி எழுப்பினர்; தி.மு.க. எம்.பி. கதிர் ஆனந்த் குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 22 Sep 2020 10:26 AM GMT (Updated: 22 Sep 2020 10:26 AM GMT)

புலனாய்வு பிரிவினர் என கூறி கொண்டு 2 பேர் என்னிடம் கேள்வி எழுப்பினர் என்று தி.மு.க. எம்.பி. கதிர் ஆனந்த் மக்களவையில் குற்றச்சாட்டு கூறியுள்ளார்.

புதுடெல்லி,

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த 14ந்தேதி தொடங்கி நடந்து வருகிறது.  இதில் இரு அவைகளிலும் எம்.பி.க்கள் தங்களது பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து வருகின்றனர்.  பல முக்கிய மசோதாக்கள் எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புகளுக்கு இடையே நிறைவேற்றப்பட்டு வருகின்றன.

நாடாளுமன்ற கூட்டத்தொடரின் 9வது நாளாக மக்களவை இன்று கூடியது.  இதில் பேசிய தி.மு.க. எம்.பி. கதிர் ஆனந்த், புலனாய்வு பிரிவினர் என்று கூறிக்கொண்டு 2 பேர் என்னை இன்று சந்தித்தனர்.  அவர்கள், மக்களவையில் இன்று நான் என்ன பிரச்சினை பற்றி பேசப்போகிறேன் என்று என்னிடம் கேள்வி எழுப்பினர் என்று குற்றச்சாட்டு கூறினார்.

இதற்கு பதிலளித்து பேசிய மக்களவை தலைவர், உறுப்பினர் கூறிய குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரம் இருந்தால் எழுத்துப்பூர்வமாக என்னிடம் புகார் தெரிவிக்கலாம் என்று கூறினார்.

கதிர் ஆனந்த் எழுப்பிய பிரச்சினை குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என தி.மு.க. எம்.பி.க்கள் வலியுறுத்தினர்.  இந்நிலையில், மக்களவை கூடிய 10 நிமிடங்களில் ஒத்திவைக்கப்பட்டது.  மக்களவை மாலை 4.15 மணி வரை ஒத்திவைக்கப்படுகிறது என அவை தலைவர் கூறியுள்ளார்.

Next Story