மராட்டியத்தில் மேலும் 253- போலீசாருக்கு கொரோனா தொற்று


மராட்டியத்தில் மேலும் 253- போலீசாருக்கு கொரோனா தொற்று
x
தினத்தந்தி 23 Sep 2020 8:49 AM GMT (Updated: 23 Sep 2020 8:49 AM GMT)

மராட்டியத்தில் மேலும் 253- போலீசாருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மும்பை,

மராட்டிய மாநிலத்தில் கொரோனா தொற்று மின்னல் வேகத்தில் பரவி வருகிறது. நாட்டிலேயே அதிக கொரோனா பாதிப்புடன் மராட்டியம் முதலிடம் வகிக்கிறது. மராட்டியத்தில் செவ்வாய்க்கிழமை ஒருநாளில் மட்டும் சுமார்  18 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அம்மாநிலத்தில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 12 லட்சத்தை தாண்டியுள்ளது. 

கொரோனா தொற்றுக்கு எதிராக களத்தில் நின்று பணியாற்றும் துறைகளில் ஒன்றான காவல்துறையை சேர்ந்தவர்களும் கொரோனா தொற்றில் இருந்து தப்பவில்லை. அம்மாநிலத்தில் இன்று ஒரே நாளில் மட்டு 253- பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா தொற்றுக்கு எதிராக களத்தில் நின்று பணியாற்றும் துறைகளில் ஒன்றான காவல்துறையை சேர்ந்தவர்களும் கொரோனா தொற்றில் இருந்து தப்பவில்லை.. 

அம்மாநிலத்தில் இன்று ஒரே நாளில் மட்டும்  253-  போலீசாருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் தொற்று பாதிப்புடன் 5 போலீசார் உயிரிழந்த நிலையில்,  இதுவரை 234- பேர் உயிரிழந்துள்ளனர். தொற்று பாதிப்புடன் 3 ஆயிரத்து435 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். தொற்று பாதிப்ப்பில் இருந்து 18 ஆயிரம் போலீசார் குணம் அடைந்துள்ளனர்.Next Story