மாநிலங்களவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு


மாநிலங்களவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு
x
தினத்தந்தி 23 Sept 2020 2:31 PM IST (Updated: 23 Sept 2020 2:31 PM IST)
t-max-icont-min-icon

அக்.1ம் தேதி வரை நடத்த திட்டமிடப்பட்டிருந்த நிலையில் 8 நாட்களுக்கு முன்பாகவே நிறைவு செய்யப்பட்டது

புதுடெல்லி,

மாநிலங்களவை கூட்டத்தொடர் முன் கூட்டியே முடித்துக்கொள்ளப்பட்டுள்ளது. அக்டோபர் 1 ஆம் தேதி வரை நடைபெறுவதாக இருந்த கூட்டத்தொடர்  கொரோனா அச்சுறுத்தல் காரணமாக 10 நாட்களுடன் முடித்துக்கொள்ளப்பட்டுள்ளது. 

மாநிலங்களவையை கால வரையின்றி ஒத்திவைப்பதாக மாநிலங்களவை தலைவர் வெங்கையா நாயுடு அறிவித்தார். மாநிலங்களவை கூட்டத்தொடரின் கடைசி நாளான இன்று பிரதமர் மோடி, அவைக்கு வந்திருந்தார்.  

10 நாட்கள் நடைபெற்ற மழைக்கால கூட்டத்தொடரில் 19 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.  8 நாட்களுக்கு முன்பாகவே மாநிலங்களவை  நிறைவு செய்யப்பட்டுள்ளது. 

1 More update

Next Story