கொரோனாவால் பாதிக்கப்பட்ட டெல்லி துணை முதல் மந்திரி மனிஷ் சிசோடியா மருத்துவமனையில் அனுமதி
கடந்த 14 ஆம் தேதி டெல்லி துணை முதல் மந்திரி மனிஷ் சிசோடியாவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
புதுடெல்லி,
டெல்லி துணை முதல் மந்திரி மனிஷ் சிசோடியாவுக்கு கடந்த 14 ஆம் தேதி கொரோனா தொற்று பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து, அவர் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு இருந்தார். இணை நோய்கள் எதுவும் இல்லாமல் தொற்று பாதிப்பு ஏற்பட்டவர்களுக்கு வீட்டில் தனிமைப்படுத்திக்கொள்ள டெல்லியில் அறிவுறுத்தப்படுகிறது.
அதன்படி, துணை முதல் மந்திரி மனிஷ் சிசோடியாவும் வீட்டுத்தனிமையில் இருந்த நிலையில், அவருக்கு காய்ச்சல் மற்றும் மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டது. இதையடுத்து, மனிஷ் சிசோடியா உடனடியாக லோக் நாயக் ஜெயபிரகாஷ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Related Tags :
Next Story