காஷ்மீரில் பயங்கரவாதிகள் திடீர் தாக்குதல்; சி.ஆர்.பி.எப். வீரர் உயிரிழப்பு


காஷ்மீரில் பயங்கரவாதிகள் திடீர் தாக்குதல்; சி.ஆர்.பி.எப். வீரர் உயிரிழப்பு
x
தினத்தந்தி 24 Sept 2020 1:42 PM IST (Updated: 24 Sept 2020 1:42 PM IST)
t-max-icont-min-icon

ஜம்மு மற்றும் காஷ்மீரில் மோட்டார் சைக்கிளில் வந்த பயங்கரவாதிகள் சிலர் திடீர் தாக்குதல் நடத்தியதில் காயமடைந்த சி.ஆர்.பி.எப். வீரர் உயிரிழந்து உள்ளார்.

ஜம்மு,

ஜம்மு மற்றும் காஷ்மீரின் புத்காம் மாவட்டத்தில் சதூரா பகுதியில் பயங்கரவாதிகள் சிலர் மோட்டார் சைக்கிளில் வந்தனர்.  அவர்கள் மத்திய ரிசர்வ் போலீஸ் படை வீரர்கள் மீது தாக்குதல் நடத்தினர்.  ஏ.கே. ரக துப்பாக்கி ஒன்றையும் பறித்து கொண்டு தப்பியோடினர்.

இதனை தொடர்ந்து அந்த பகுதியை தங்களது கட்டுக்குள் கொண்டு வந்த பாதுகாப்பு படையினர் தேடுதல் வேட்டையை கூட்டாக மேற்கொண்டுள்ளனர்.  பயங்கரவாதிகள் துப்பாக்கியால் சுட்டதில் காயமடைந்த சி.ஆர்.பி.எப். வீரர் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்து உள்ளார்.
1 More update

Next Story