ஜம்மு காஷ்மீரில் பிரபல வக்கீல் பயங்கரவாதிகளால் சுட்டுக்கொலை


ஜம்மு காஷ்மீரில் பிரபல வக்கீல் பயங்கரவாதிகளால் சுட்டுக்கொலை
x
தினத்தந்தி 24 Sept 2020 9:07 PM IST (Updated: 24 Sept 2020 9:07 PM IST)
t-max-icont-min-icon

ஜம்மு காஷ்மீரில் பிரபல வக்கீல் பயங்கரவாதிகளால் சுட்டுக்கொலை செய்யப்பட்டார்.

புதுடெல்லி: 

ஸ்ரீநகரின் ஹவால் பகுதியில் ஜம்மு காஷ்மீரின் பிரபல வக்கீலும் மற்றும் டிவி பேனலிஸ்டுமான  பாபர் காத்ரியை அடையாளம் தெரியாத பயங்கரவாதிகள் சுட்டுக் கொன்றனர்.

பாபர் காத்ரியின் ஹவால் இல்லத்திற்குள் மாலை 6.25 மணியளவில் நுழைந்த துப்பாக்கி ஏந்தியவர்கள் 
வக்கீல் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர். காத்ரி உடனடியாக ஸ்கிம்ஸ் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார், அங்கு மருத்துவர்கள் அவரை  இறந்துவிட்டதாக' அறிவித்தனர் என்று அந்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

பாபர் காத்ரி  தொலைக்காட்சி விவாதங்களில் தோன்றியும், உள்ளூர் செய்தித்தாள்களுக்கான கருத்து பக்கங்களை எழுதியும் வந்தார்.

அவர் இறப்பதற்கு முன், தனக்கு எதிராக "தவறான பிரச்சாரத்தை" பரப்பியதற்காக பேஸ்புக் பயனருக்கு எதிராக எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யுமாறு ஜம்முவில் காவல்துறையினரை வலியுறுத்தி ஸ்கிரீன் ஷாட்டை டுவீட் செய்திருந்தார் 


Next Story