தொழிலாளர் மசோதாக்கள் மத்திய அரசு மீது ராகுல் காந்தி குற்றச்சாட்டு

புதுடெல்லி,
நாடாளுமன்ற கூட்டத் தொடரின் கடைசி நாளான நேற்று முன்தினம் மாநிலங்களவையில் 3 தொழிலாளர் மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன. இதன்படி 300 தொழிலாளர்கள் வரை பணிபுரியும் நிறுவனங்களை மூட இனி அரசின் அனுமதி தேவை இல்லை. இந்த வரம்பு இதுவரை 100 தொழிலாளர்கள் என இருந்து வந்தது. இந்த தொழிலாளர் மசோதாக்களுக்கு காங்கிரஸ் கட்சி எதிர்ப்பு தெரிவித்து உள்ளது.
இதுகுறித்து அக்கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி எம்.பி. வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், “விவசாயிகளை தொடர்ந்து தொழிலாளர்கள் மீது தாக்குதல் தொடுக்கப்பட்டு உள்ளது. ஏழைகள் சுரண்டப்படுகிறார்கள். நண்பர்களுக்கு ஆதரவு அளிக்கப்படுகிறது. இதுதான் மோடியின் ஆட்சி” என்று குற்றம் சாட்டி உள்ளார்.
காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், நெருக்கடியான இந்த காலகட்டத்தில் மக்களுக்கு பாதுகாப்பாக இருக்க வேண்டிய பாரதீய ஜனதா அரசு, தொழிலாளர்களை பணியில் இருந்து நீக்குவதற்கான சட்டத்தை கொண்டு வந்துள்ளது என்று குறிப்பிட்டு இருக்கிறார்.

Related Tags :
Next Story