பீகார் சட்டசபை தேர்தலில் 4-ல் 3 பங்கு பெரும்பான்மை பெறுவோம் பா.ஜனதா நம்பிக்கை


பீகார் சட்டசபை தேர்தலில் 4-ல் 3 பங்கு பெரும்பான்மை பெறுவோம் பா.ஜனதா நம்பிக்கை
x
தினத்தந்தி 25 Sep 2020 8:15 PM GMT (Updated: 25 Sep 2020 8:15 PM GMT)

பீகார் சட்டசபை தேர்தலில் 4-ல் 3 பங்கு பெரும்பான்மை பெறுவோம் என்று அம்மாநில பா.ஜனதா பொறுப்பாளர் பூபேந்தர் யாதவ் கூறியுள்ளார்.

புதுடெல்லி,

பீகார் சட்டசபை தேர்தல் அறிவிப்பு குறித்து அம்மாநில பா.ஜனதா பொறுப்பாளர் பூபேந்தர் யாதவ் கூறியதாவது:-

பீகாரில் கடந்த நாடாளுமன்ற தேர்தலில் பெற்ற வெற்றியை இந்த சட்டசபை தேர்தலிலும் பா.ஜனதா கூட்டணி பெறும். நான்கில் 3 பங்கு பெரும்பான்மையுடன் வெற்றி பெறுவோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

மத்திய மந்திரி பிரகாஷ் ஜவடேகர் கூறுகையில், “தேர்தலை சந்திக்க பா.ஜனதா முற்றிலும் தயாராக இருக்கிறது. நிதிஷ்குமார் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி மீண்டும் வெற்றி பெற்று நல்லாட்சி தரும்” என்றார்.

Next Story