அசாமில் நிலநடுக்கம்; ரிக்டரில் 3.9 ஆக பதிவு


அசாமில் நிலநடுக்கம்; ரிக்டரில் 3.9 ஆக பதிவு
x
தினத்தந்தி 3 Oct 2020 10:34 PM IST (Updated: 3 Oct 2020 10:34 PM IST)
t-max-icont-min-icon

அசாமில் இன்றிரவு ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டரில் 3.9 ஆக பதிவாகி உள்ளது.

காம்ரூப்,

அசாம் மாநிலத்தின் காம்ரூப் நகரில் இன்றிரவு 9.06 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது.  32 வினாடிகள் உணரப்பட்ட இந்த நிலநடுக்கம் கவுகாத்தி நகரில் இருந்து 44 கி.மீ. தொலைவில் மையம் கொண்டுள்ளது.  நிலநடுக்கம் ரிக்டரில் 3.9 ஆக பதிவாகி இருக்கிறது.  

எனினும், இதனால் ஏற்பட்ட பொருட்சேதம் பற்றிய பிற விவரங்கள் எதுவும் உடனடியாக வெளியாகவில்லை.  அசாமிற்கு அருகே அமைந்த பூடான் நாட்டில் நேற்றிரவு திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது.  இது ரிக்டரில் 3.7 ஆக பதிவாகி உள்ளது என தேசிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்து இருந்தது.

Next Story