கொரோனா பரவல் காரணமாக டெல்லியில் பள்ளிகளுக்கு 31-ந்தேதி வரை விடுமுறை
கொரோனா பரவல் காரணமாக டெல்லியில் பள்ளிகளுக்கு வருகிற 31-ந்தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.
புதுடெல்லி,
கொரோனா வேகமாக பரவி வருவதால் நாடு முழுவதும் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது. மாணவர்களின் படிப்பு வீணாகக்கூடாது என்பதற்காக ஆன்-லைன் வகுப்புகள் நடத்தப்படுகின்றன. சில மாநிலங்களில் நோய் தொற்று பரவலை கருத்தில் கொண்டு சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டு உள்ளன.
தேசிய தலைநகர் டெல்லியிலும் கொரோனா பரவல் அதிகரித்த வண்ணம் இருந்தது. ஆனால் கடந்த 2 வாரங்களாக நோய் தொற்று குறைந்து வருவதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் டெல்லியில் உள்ள பள்ளிகளுக்கு வருகிற 31-ந்தேதி வரை விடுமுறை அளிக்கப்படுவதாக துணை முதல்-மந்திரியும், கல்வித்துறை மந்திரியுமான மணீஷ் சிசோடியா அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பதிவில், ‘ஒரு பெற்றோராக தற்போதைய இக்கட்டான சூழ்நிலையை முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் புரிந்து வைத்துள்ளார். இந்த நேரத்தில் குழந்தைகளின் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டியது அவசியம், எனவே அனைத்து பள்ளிகளும் அக்டோபர் 31-ந்தேதி வரை மூடப்படும்’ என்று குறிப்பிட்டுள்ளார்.
Related Tags :
Next Story