நமது திறன்கள் எதிரியை ஆச்சரியப்படுத்தியுள்ளன. இந்திய விமானப்படை விரைவாக மாறி வருகிறது -மார்ஷல் ராகேஷ் குமார் சிங்
பாகிஸ்தான், சீனாவுடனான எல்லை பதற்றங்களுக்கு மத்தியில் பாகிஸ்தான், சீனாவுடனான போர்களுக்கும் இரு மற்றும் எந்தவொரு மோதலுக்கும் இந்திய விமானப்படை தயாராக உள்ளது என அதன் தலைவர் படவுரியா தெரிவித்து உள்ளார்.
புதுடெல்லி:
எந்தவொரு மோதலுக்கும் இந்திய விமானப்படை தயாராக இருப்பதாக இந்திய விமானப்படை தலைவர் மார்ஷல் ராகேஷ் குமார் சிங் படவுரியா தெரிவித்து உள்ளார்.
பாகிஸ்தான் மற்றும் சீனாவுடனான இரு முன்னணி போருக்கும் இந்திய விமானப்படை தயாரா என்று கேட்டபோது விமானப்படைத் தலைவர் "நமது திறன்கள் நமது எதிரியை ஆச்சரியப்படுத்தியுள்ளன. இந்திய விமானப்படை விரைவாக மாறுகிறது," என்று அவர் கூறினார்.
சீனாவின் எந்தவொரு சவாலையும் சமாளிக்க தயாரா என்று கேட்கப்பட்டபோது, படை "மிகச் சிறந்த நிலையில் உள்ளது" என்று விமானப்படை தலைவர் கூறினார்.
Related Tags :
Next Story