அரசின் தலைவராக 20-ம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் பிரதமர் மோடி..!
பிரதமர் நரேந்திர மோடி மக்கள் மக்கள் சேவையில் எந்த வித இடைவெளியும் இல்லாமல் தனது 20’வது ஆண்டில் அடி எடுத்து வைத்துள்ளார்.
புதுடெல்லி,
முதலமைச்சர், பிரதமர் பதவிகள் என ஜனநாயக முறைப்படி தேர்வு செய்யப்பட்ட அரசின் தலைவராக தொடர்ந்து 19 ஆண்டுகளை நிறைவு செய்து 20 ஆம் ஆண்டில் அடி எடுத்து வைத்துள்ள பிரதமர் மோடி, புதிய மைல் கல்லை எட்டியுள்ளார்.
2001 அக்டோபர் 7-ம் தேதி முதன்முறையாக குஜராத் மாநில முதலமைச்சராக பதவியில் அமர்ந்த மோடி, தொடர்ந்து 2002, 2007 மற்றும் 2012 - என மூன்று முறை தொடர்ச்சியாக முதல்வராக தேர்வானார்.
மூன்றாம் முறையாக முதலமைச்சராக இருந்த போது, 2014 மக்களவை தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற மோடி, நாட்டின் 14-வது பிரதமரானார். 2019-ஆம் ஆண்டு மக்களவை தேர்தலிலும் வெற்றி பெற்ற மோடி, இரண்டாவது முறையாக பிரதமராக தேர்வானார். இதன்மூலம், அரசின் தலைவராக மக்கள் சேவையில் இன்று 20வது ஆண்டில் பிரதமர் மோடி அடியெடுத்து வைத்துள்ளார்.
Related Tags :
Next Story