இந்தியாவின் வடக்கு எல்லையில் 60 ஆயிரம் வீரர்களை சீனா நிறுத்தியுள்ளது: அமெரிக்க வெளியுறவுத்துறை மந்திரி


இந்தியாவின் வடக்கு எல்லையில் 60 ஆயிரம் வீரர்களை   சீனா நிறுத்தியுள்ளது: அமெரிக்க வெளியுறவுத்துறை மந்திரி
x
தினத்தந்தி 10 Oct 2020 3:19 PM IST (Updated: 10 Oct 2020 3:28 PM IST)
t-max-icont-min-icon

இந்தியாவின் வடக்கு எல்லையில் 60 ஆயிரம் வீரர்களை சீனா நிறுத்தியுள்ளது என்று அமெரிக்க வெளியுறவுத்துறை மந்திரி தெரிவித்துள்ளார்.

வாஷிங்டன், 

லடாக் எல்லையில் இந்தியா-சீனா இடையே ஏற்பட்டுள்ள மோதலை தொடர்ந்து இரு நாடுகளும் எல்லையில் படைகளை குவித்து வருகின்றன. இதனால் அங்கு தொடர்ந்து போர் பதற்றம் நீடிக்கிறது. அதே நேரம் அங்கு அமைதியை ஏற்படுத்துவது தொடர்பாக மாஸ்கோவில் இருநாட்டு வெளியுறவு மந்திரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது எல்லையில் படைகளை திரும்ப பெறுவது மற்றும் அமைதி ஏற்படுத்துவது தொடர்பாக 5 அம்ச திட்டம் வகுக்கப்பட்டது.

இந்த திட்டத்தை அமல்படுத்துவது தொடர்பாக இருநாட்டு ராணுவ அதிகாரிகள் தொடர்ச்சியாக பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர். எனினும், பதற்றம் தணிந்தபாடில்லை. 

இந்த நிலையில்,  இந்தியாவின் வடக்கு எல்லைப் பகுதிகளில் சீனா சுமார் 60 ஆயிரம் படையினரை நிறுத்தியிருப்பதாக அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் மைக் பாம்பியோ தெரிவித்துள்ளார். மேலும், சீனாவின் இந்த நடவடிக்கை, மிக மோசமான நடத்தை  எனவும் மைக் பாம்பியோ விமர்சித்துள்ளார்.


Next Story