பீகாரில் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை; தாய்-மகனை கால்வாயில் வீசிச் சென்ற கும்பல்
பீகார் மாநிலம் பக்சரில் பெண் ஒருவரை பாலியல் பலாத்காரம் செய்த 7 பேர் கொண்ட கும்பல் அவரையும் அவருடைய மகனையும் தாக்கி கால்வாயில் வீசிச் சென்றுள்ளது.
பாட்னா,
பீகார் மாநிலம் பக்சரில் பெண் ஒருவர் தனது 5 வயது மகனுடன் வங்கிக்கு சென்றுள்ளார். அப்போது அவரை 7 பேர் கொண்ட கும்பல் பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். இதன் பின்னர் அவரையும், அவருடைய மகனையும் தாக்கி கால்வாயில் வீசிச் சென்றுள்ளனர். இதில் 5 வயது சிறுவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளான்.
தீவிர காயங்களுடன் மீட்கப்பட்ட அந்த பெண் தற்போது பாட்னா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுதொடர்பாக ஒருவரை கைது செய்துள்ள போலீசார், மற்ற குற்றவாளிகளை தேடி வருகின்றனர். உத்தர பிரதேச மாநிலம் ஹத்ரசில் இளம் பெண் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட நிலையில், தற்போது பீகாரில் மேலும் ஒரு கூட்டு பாலியல் வன்கொடுமை சம்பவம் அரங்கேறியிருப்பது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

Related Tags :
Next Story