கொரோனாவால் 60 வயதுக்குட்பட்டோர் இறப்பு 47 சதவீதம்: அதிர்ச்சி தகவல்


கொரோனாவால் 60 வயதுக்குட்பட்டோர் இறப்பு 47 சதவீதம்: அதிர்ச்சி தகவல்
x
தினத்தந்தி 14 Oct 2020 3:38 AM IST (Updated: 14 Oct 2020 3:38 AM IST)
t-max-icont-min-icon

கொரோனாவால் 60 வயதுக்குட்பட்டோர் இறப்பு 47 சதவீதமாக உள்ளது என்று அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

புதுடெல்லி, 

கொரோனா வைரஸ் தொற்றால் வயதானவர்கள்தான் அதிகளவில் உலகமெங்கும் இறக்கிறார்கள் என தகவல்கள் வெளியாகி வந்தன.

இந்தியாவில், கொரோனாவால் இறந்தவர்களில் கிட்டத்தட்ட பாதிப்பேர் (47 சதவீதம்), 60 வயதுக்குட்பட்டவர்கள் என்ற அதிர்ச்சி தகவலை மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

இதுபற்றி மத்திய சுகாதார செயலாளர் ராஜேஷ் பூஷண் நிருபர்களிடம் பேசுகையில், “கொரோனாவால் இறந்தவர்களில் 53 சதவீதம்பேர் 60 வயதுக்கு மேற்பட்டோர் ஆவார்கள். இறந்தவர்களில் 45-60 வயதினர் 35 சதவீதம், 26-44 வயதினர் 10 சதவீதம், 18-25 வயதினர் 1 சதவீதம், 17 வயதுக்குஉட்பட்டோர் 1 சதவீதம்” என கூறினார்.

60 வயதுக்கு மேற்பட்டோர் இறப்பில் 24.6 சதவீதத்தினர் நாள்பட்ட பிற நோய்களுடன் இருந்தவர்கள், 4.8 சதவீதத்தினர் அப்படிப்பட்ட நோய்கள் இல்லாதவர்கள் எனவும் அவர் தெரிவித்தார்.

45-60 வயதினர் இறப்பில் 13.9 சதவீதத்தினர் நாள்பட்ட பிறநோய்களை கொண்டிருந்தவர்கள், 1.5 சதவீதத்தினர் அப்படிப்பட்ட நோய்கள் இல்லாதவர்கள் எனவும் குறிப்பிட்டார்.


Next Story