இமாசலபிரதேசத்தில் மேலும் ஒரு மந்திரிக்கு கொரோனா


இமாசலபிரதேசத்தில் மேலும் ஒரு மந்திரிக்கு கொரோனா
x
தினத்தந்தி 15 Oct 2020 6:36 AM IST (Updated: 15 Oct 2020 6:36 AM IST)
t-max-icont-min-icon

இமாசலபிரதேசத்தில் மேலும் ஒரு மந்திரிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

சிம்லா,

இமாசலபிரதேசத்தில் பா.ஜனதா முதல்-மந்திரி ஜெய்ராம் தாக்குர் கொரோனாவால் பாதிக்கப்பட்டது சமீபத்தில் தெரியவந்தது. இதனையடுத்து டாக்டர்களின் அறிவுரையின்படி அவர் தனது வீட்டிலேயே தனிமைப்படுத்தி கொண்டார். மேலும் சில மந்திரிகள், எம்.எல்.ஏ.க்களும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர்.

இந்த நிலையில் அம்மாநிலத்தை சேர்ந்த தகவல் தொழில்நுட்பம் மற்றும் பழங்குடியினர் நலத்துறை மந்திரி ராம்லால் மர்கந்தாவுக்கு கொரோனா தொற்று இருப்பது நேற்று தெரியவந்தது. இதனை தனது டுவிட்டர் பதிவில் அவர் உறுதி செய்துள்ளார். எனவே அவர் தன்னை தனிமைப்படுத்திக்கொண்டார்.

இமாசலபிரதேசத்தில் கடந்த 3-ந்தேதி நடந்த அதிநவீன வசதிகளுடன் 9 கி.மீ. நீள சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற முதல்-மந்திரி ஜெய்ராம் தாக்குர், எம்.எல்.ஏ. சுரிந்தர், முதல்-மந்திரியின் தனிச்செயலாளர் மற்றும் செய்தி தொடர்பு துறை அதிகாரிகளுக்கும் தொற்று இருப்பது நினைவுகூரத்தக்கது.

Next Story