மும்பை, தானே உள்ளிட்ட பகுதிகளுக்கு இன்று ‘ரெட் அலர்ட்’ - வானிலை மையம் அறிவிப்பு
கனமழை காரணமாக மும்பை, தானே உள்ளிட்ட பகுதிகளுக்கு இன்று ‘ரெட் அலர்ட்’ விடுக்கப்பட்டுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
மும்பை,
மராட்டிய மாநிலத்தில் பல்வேறு மாவட்டங்களில் தற்போது கனமழை பெய்து வருகிறது. மேலும் அடுத்த 24 மணி நேரத்திற்கு மழை தொடரும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனை தொடர்ந்து மும்பை, தானே, பல்கர் உள்ளிட்ட வடக்கு கொங்கன் பகுதிகளுக்கு இன்று ‘ரெட் அலர்ட்’ விடுக்கப்பட்டுள்ளது.
கனமழை காரணமாக மும்பையின் பல்வேறு பகுதிகளில் நீர் தேங்கி உள்ளது. இதனால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. குடியிருப்பு பகுதிகளுக்குள் நீர் புகுந்துள்ளதால் மக்கள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். புனே மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நிம்கான் கெட்கி கிராமத்தில் நேற்று 40 பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர்.

Related Tags :
Next Story