ஏழைகளுக்கு 6 மாத ஆட்சியில் ரூ.23 ஆயிரம் கோடி வழங்கி உள்ளேன்; மத்திய பிரதேச முதல் மந்திரி


ஏழைகளுக்கு 6 மாத ஆட்சியில் ரூ.23 ஆயிரம் கோடி வழங்கி உள்ளேன்; மத்திய பிரதேச முதல் மந்திரி
x
தினத்தந்தி 15 Oct 2020 4:37 PM GMT (Updated: 15 Oct 2020 4:37 PM GMT)

எனது 6 மாத கால ஆட்சியில் ஏழைகளுக்கு ரூ.23 ஆயிரம் கோடி வழங்கி உள்ளேன் என்று மத்திய பிரதேச முதல் மந்திரி சிவராஜ் சிங் சவுகான் கூறியுள்ளார்.

இந்தூர்,

மத்திய பிரதேச முதல் மந்திரி சிவராஜ் சிங் சவுகான் மொரீனா நகரில் இன்று பேசும்பொழுது, மாநிலத்தில் வளர்ச்சி பணிகளுக்கு போதிய அளவுக்கு நிதி இல்லை என அழுகுரலாக கூறுவதனையே வாடிக்கையாக கொண்டிருந்தவர் முன்னாள் முதல் மந்திரி கமல்நாத்.

ஆனால், நான் முதல் மந்திரியானவுடன், கஜானாவை நாங்கள் திறந்து விட்டோம்.  ஆறே மாத காலத்தில் எங்களது ஆட்சியில் ஏழைகளுக்கு ரூ.23 ஆயிரம் கோடி வழங்கப்பட்டு உள்ளது என்று சிவராஜ் சிங் சவுகான் கூறியுள்ளார்.

Next Story