தற்கொலை செய்த சிறை கைதியின் வயிற்றுக்குள் கடிதம்: பிரேத பரிசோதனையில் சிக்கியது
தற்கொலை செய்த சிறை கைதியின் வயிற்றுக்குள் இருந்த கடிதம் பிரேத பரிசோதனையில் சிக்கியது.
நாசிக்,
நாசிக் மத்திய சிறையில் கொலை வழக்கு ஒன்றில் கைதாகி ஆயுள் தண்டனை அனுபவித்து வந்தவர் அஸ்கர் அலி (வயது32). இவர் சிறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது பற்றி தகவல் அறிந்த நாசிக் போலீசார் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனையின் போது அவரது வயிற்றின் உள்ளே பிளாஸ்டிக் கவரில் சுற்றப்பட்ட கடிதம் ஒன்று இருந்ததைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த டாக்டர்கள் போலீசாரிடம் தெரிவித்தனர்.
அந்த கடிதத்தை கைப்பற்றிய போலீசார் அதை பிரித்து பார்த்தனர். இதில், சிறை காவலர்கள், தன்னை வார்டனாக வேலை செய்ய விடாமல் துன்புறுத்தி வந்ததால் தற்கொலை செய்து கொள்வதாக எழுதப்பட்டு இருந்தது. இந்த குற்றச்சாட்டை சிறை காவலர்கள் மறுத்துள்ளனர்.
தற்கொலை கடிதம் போலீசார் கையில் கிடைக்க வேண்டும் என்பதற்காக அவர் தனது சாவுக்கு முன்பு விழுங்கி இருப்பது தெரியவந்தது.
Related Tags :
Next Story