கேரளாவில் கொரோனா பாதுகாப்பு விதிகளை மீறி எதிர்க்கட்சிகள் போராட்டத்தில் ஈடுபட்டன; முதல் மந்திரி குற்றச்சாட்டு


கேரளாவில் கொரோனா பாதுகாப்பு விதிகளை மீறி எதிர்க்கட்சிகள் போராட்டத்தில் ஈடுபட்டன; முதல் மந்திரி குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 19 Oct 2020 3:44 PM GMT (Updated: 19 Oct 2020 3:44 PM GMT)

கேரளாவில் கொரோனாவை கட்டுப்படுத்த அரசு கவனம் செலுத்தியபோது பாதுகாப்பு விதிகளை மீறி எதிர்க்கட்சிகள் போராட்டத்தில் ஈடுபட்டன என முதல் மந்திரி பினராயி விஜயன் குற்றச்சாட்டு கூறியுள்ளார்.

திருவனந்தபுரம்,

கேரள முதல் மந்திரி பினராயி விஜயன் கொரோனா பாதிப்புகள் மற்றும் கட்டுப்படுத்தும் பணிகள் பற்றி செய்தியாளர்களிடம் இன்று பேசினார்.  அவர் கூறும்பொழுது, கேரள அரசு கொரோனா வைரசை கட்டுப்படுத்தியது பற்றிய உண்மையை புரிந்து கொள்ளாமல் கேரளாவின் புகழை கெடுக்க சிலர் முயற்சித்து வருகின்றனர்.

கேரளா, இந்தியாவில் கொரோனா பாதிப்பு ஏற்பட்ட முதல் மாநிலம்.  அந்த நிலையில், அதனை நாங்கள் கட்டுப்படுத்தி வெற்றியடைந்தோம்.  கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றிய முதல் மாநிலம் கேரளா ஆகும்.

ஓணம் பண்டிகையின்பொழுது, கேரள அரசு பல தளர்வுகளை வெளியிட்டது என்பதில் உண்மையில்லை.  கொரோனா பணிகளில் மாநில அரசு கவனம் செலுத்தி கொண்டிருந்தபொழுது, கொரோனா விதிமுறைகள் அனைத்தும் மீறப்பட்டு எதிர்க்கட்சிகள் பெரிய அளவில் போராட்டம் நடத்தி சமூகத்திற்கு தவறான செய்தியை அளித்து கொண்டிருந்தன.

கொரோனா பணிகளுக்காக மத்திய சுகாதார மந்திரி எப்பொழுதும் எங்களை புகழ்ந்தே பேசியுள்ளார்.  ஓணம் பண்டிகை பற்றி அவர் குறிப்பிட்டு பேசியது ஆக்கப்பூர்வ வகையில் காணப்பட வேண்டும்.  ஏனெனில், வட இந்தியாவில் பல பண்டிகைகள் வரவுள்ளன.  நம்முடைய பாதுகாப்பினை நாம் விட்டு விட கூடாது என்று அவர் கூறியுள்ளார்.

Next Story