இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 46,791 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி


இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 46,791 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி
x
தினத்தந்தி 20 Oct 2020 4:55 AM GMT (Updated: 20 Oct 2020 4:55 AM GMT)

இந்தியாவில் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைவோர் எண்ணிக்கை 67.33 லட்சமாக அதிகரித்துள்ளது.

புதுடெல்லி,

இந்தியாவில் தீவிரமாக பரவி வந்த கொரோனா தொற்று சமீப நாட்களாக குறைய தொடங்கி இருக்கிறது. அதேநேரம் குணமடைவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. 

அந்தவகையில் இன்று காலை நிலவரப்படி மேலும் 69,721 பேர் தொற்றில் இருந்து மீண்டுள்ளனர். இதனால், குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 67,33,329 ஆக உயர்ந்துள்ளது. 

மேலும் நேற்று ஒரே நாளில் 46,791 பேருக்கு கொரோனா உறுதியானதால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் 75,97,064 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதித்த 7,48,538 பேருக்கு இந்தியாவில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் 587 பேர் உயிரிழந்தனர். இந்தியாவில் கொரோனாவால் இதுவரை 1,15,197 பேர் உயிரிழந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 10,32,795 பேருக்கு கொரோனா மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. இந்தியாவில் இதுவரை 9,61,16,771 பேருக்கு கொரோனா மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது. 

Next Story