புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்துவதற்கான பணிகளை துவக்கியது பல்கலைக்கழக மானியக் குழு


புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்துவதற்கான பணிகளை துவக்கியது பல்கலைக்கழக மானியக் குழு
x
தினத்தந்தி 21 Oct 2020 4:08 PM IST (Updated: 21 Oct 2020 4:08 PM IST)
t-max-icont-min-icon

புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்துவதற்கான பணிகளை பல்கலைக்கழக மானியக் குழு துவக்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

புதுடெல்லி,

புதிய கல்விக்கொள்கை அடிப்படையில் உயர் கல்வி நிறுவனங்கள் நிர்வாக சீரமைப்பு பணிகளை துவக்க பல்கலைக்கழக மானிய குழு உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.  

புதிய கல்விக்கொள்கையை நடைமுறைப்படுத்துவதற்கான பணிகள் இறுதிக்கட்டத்தில் உள்ளதாகவும், பொதுமக்கள் கருத்துகள் அடிப்படையில் புதிய கல்வி கொள்கையை இறுதி செய்யும் பணி நடைபெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

உயர்கல்வி நிறுவனங்கள் நிர்வாக சீரமைப்பு பணிகளை ஆரம்பிக்குமாறு பல்கலை. மானிய குழு உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது.  தமிழகத்தில் பள்ளி கல்வி குறித்து ஆராய அமைக்கப்பட்ட குழு ஒரு கூட்டம் மட்டுமே நடத்தி இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story