கர்நாடகாவில் இன்று ஒரேநாளில் 9,289 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர்


கர்நாடகாவில் இன்று ஒரேநாளில் 9,289 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர்
x
தினத்தந்தி 21 Oct 2020 4:52 PM GMT (Updated: 21 Oct 2020 4:52 PM GMT)

கர்நாடகாவில் இன்று ஒரேநாளில் 9,289 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

பெங்களூரு,

கர்நாடகத்தில் கொரோனா வைரஸ் ருத்ரதாண்டவமாடி வருகிறது.இங்கு தினமும் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும், உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

இந்நிலையில், கர்நாடக மாநில சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, மாநிலம் முழுவதும் இன்று ஒரேநாளில் அதிகபட்சமாக 9,289 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதன் மூலம் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 7,82,773 ஆக அதிகரித்துள்ளது.

கர்நாடகாவில் இன்று மேலும் 7,883 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,96,494 ஆக அதிகரித்துள்ளது.

மாநிலத்தில் இன்று ஒரேநாளில் இன்று மேலும் 88 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். இதையடுத்து கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10,696 ஆக அதிகரித்துள்ளது. தற்போது வரை மாநிலத்தில் 1,00,440 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.


Next Story