மராட்டிய மாநிலத்தில் இன்று 7,539 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
மும்பை,
மராட்டிய மாநில சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, அங்கு இன்று புதிதாக 7,539 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மராட்டியத்தில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 16,25,197 ஆக அதிகரித்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் மராட்டிய மாநிலத்தில் 198 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். இதனால் உயிரிழப்பு எண்ணிக்கை 42,831 ஆக உயர்ந்துள்ளது. தற்போது மாநிலம் முழுவதும் 1,50,011 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வரும் நிலையில் இதுவரை 14,31,856 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர்.
3-வது டோஸ் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்பதை எந்த அடிப்படையில் தீர்மானிக்க வேண்டும், 3-வது டோஸ் தடுப்பூசி, கொரோனாவை எதிர்த்து திறம்பட போராட உதவுமா என்பது குறித்து நிபுணர்கள் பதில் அளித்துள்ளனர்.