இந்தியாவில் 10 கோடி கொரோனா பரிசோதனைகள்; ஐ.சி.எம்.ஆர். அறிவிப்பு


இந்தியாவில் 10 கோடி கொரோனா பரிசோதனைகள்; ஐ.சி.எம்.ஆர். அறிவிப்பு
x
தினத்தந்தி 23 Oct 2020 1:22 AM IST (Updated: 23 Oct 2020 1:22 AM IST)
t-max-icont-min-icon

இந்தியாவில் 10 கோடி கொரோனா பரிசோதனைகள் என்ற மைல்கல்லை எட்டியுள்ளோம் என்று ஐ.சி.எம்.ஆர். தெரிவித்து உள்ளது.

புதுடெல்லி,

நாடு முழுவதும் கொரோனா பாதிப்புகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.  எனினும், சில குறிப்பிட்ட மாநிலங்களில் அதிக அளவுக்கு பரிசோதனைகள் நடத்தப்படுவது, எண்ணிக்கை உயர்வு என கூற காரணம் என்றும் கூறப்படுகிறது.

இந்நிலையில், இந்தியாவில் 10 கோடி கொரோனா பரிசோதனைகள் என்ற மைல்கல்லை எட்டியுள்ளோம் என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐ.சி.எம்.ஆர்.) தெரிவித்து உள்ளது.

இதுபற்றி ஐ.சி.எம்.ஆர். வெளியிட்டுள்ள அறிக்கையில், நாளொன்றுக்கு சராசரியாக 10 லட்சம் என்ற அளவில் கடந்த 17 நாட்களாக கொரோனா பரிசோதனைகள் நடத்தப்பட்டு இந்த சாதனை ஏற்படுத்தப்பட்டு உள்ளது.

இதேபோன்று கடந்த 45 நாட்களில் 5 கோடி கொரோனா பரிசோதனைகள் நடத்தப்பட்டு உள்ளன.

கடந்த செப்டம்பர் 8ந்தேதி வரை நாட்டில் 5 கோடி கொரோனா மாதிரி பரிசோதனைகள் நடத்தப்பட்டு இருந்தன.  இந்த எண்ணிக்கையானது அக்டோபர் 22ந்தேதி வரையில் 10 கோடி என்ற அளவை எட்டியுள்ளது.

நாடு முழுவதும் பரிசோதனை உட்கட்டமைப்புகள் மற்றும் திறனை விரைவாக அதிகரித்தன் வழியே இதனை அடைய முடிந்துள்ளது என்று தெரிவித்து உள்ளது.

போதிய பரிசோதனை உபகரணங்களை கொண்டு தொழில் நுட்பம் மற்றும் கண்டுபிடிப்புகள் ஆகியவற்றை கொண்டு கொரோனா பரிசோதனைகளை ஐ.சி.எம்.ஆர். அமைப்பு மேம்படுத்தியுள்ளது என்றும் அறிக்கையில் தெரிவித்து உள்ளது.

Next Story