தேசிய செய்திகள்

கடந்த 4 மாதங்களாக சம்பளம் வழங்கவில்லை; டெல்லியில் மருத்துவர்கள் போராட்டம் + "||" + Not paid for the last 4 months; Doctors struggle in Delhi

கடந்த 4 மாதங்களாக சம்பளம் வழங்கவில்லை; டெல்லியில் மருத்துவர்கள் போராட்டம்

கடந்த 4 மாதங்களாக சம்பளம் வழங்கவில்லை; டெல்லியில் மருத்துவர்கள் போராட்டம்
டெல்லியில் கடந்த 4 மாதங்களாக சம்பளம் வழங்கவில்லை என கூறி மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
புதுடெல்லி,

நாட்டில் கொரோனா பாதிப்புகள் பெரிய அளவில் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகின்றன.  கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் பணியில் முன்கள வீரர்களாக மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்டோர் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், நாட்டின் தலைநகர் டெல்லியில் உள்ள இந்து ராவ் மற்றும் கஸ்தூரிபாய் மருத்துவமனையில் பணியாற்றி வரும் மருத்துவர்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு உள்ளனர்.

அவர்கள் முக கவசங்களை அணிந்தபடி தரையில் அமர்ந்தபடி, கைகளில் வாசகங்கள் எழுதிய அட்டைகளை ஏந்தியபடி தங்களது எதிர்ப்பினை தெரிவித்து வருகின்றனர்.

இதுபற்றி மருத்துவர் ஒருவர் கூறும்பொழுது, போராட்டத்தில் ஈடுபடுவதற்கு முன் நாங்கள் மேயரிடம் சம்பள விவகாரம் பற்றி முறையிட்டோம்.  ஆனால் அதற்கு அவர் வடக்கு டெல்லி மாநகராட்சியில் பணம் இல்லை என கூறி விட்டார்.  எங்களுக்கு 4 மாதங்களாக சம்பளம் வழங்கவில்லை என வருத்தமுடன் கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

1. பணி நிரந்தரம் செய்யக்கோரி நர்சுகள் உண்ணாவிரத போராட்டம்
பணி நிரந்தரம் செய்யக்கோரி தற்காலிக நர்சுகள் நேற்று டி.எம்.எஸ் வளாகத்தில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
2. பணி நிரந்தரம் செய்யக்கோரி நர்சுகள் உண்ணாவிரத போராட்டம்
பணி நிரந்தரம் செய்யக்கோரி தற்காலிக நர்சுகள் நேற்று டி.எம்.எஸ் வளாகத்தில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
3. அரியானா, பீகார், காஷ்மீரில் தீவிரமடைந்த விவசாயிகள் ரெயில் மறியல் போராட்டம்
அரியானா, காஷ்மீர், பீகார் உள்ளிட்ட மாநிலங்களில் விவசாயிகள் ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு தங்களது எதிர்ப்பினை வெளிப்படுத்தி வருகின்றனர்.
4. 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வருவாய்த்துறை அலுவலர்கள் வேலைநிறுத்த போராட்டம்
10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நீலகிரியில் வருவாய்த்துறை அலுவலர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அலுவலகங்கள் வெறிச்சோடின.
5. ராணுவ ஆட்சிக்கு எதிராக தீவிரமடையும் போராட்டம் மியான்மரில் சாலைகளை சூழ்ந்த ஆயுதமேந்திய ராணுவ வாகனங்கள்
மியான்மரில் ராணுவ ஆட்சிக்கு எதிரான போராட்டம் தீவிரமடைந்து வரும் நிலையில் எதிர்ப்பாளர்களை ஒடுக்க தயாராகும் விதத்தில் மியான்மரின் பல நகரங்களில் சாலைகளில் ஆயுதமேந்திய ராணுவ வாகனங்கள் சூழ்ந்துள்ளன.