இந்தியாவில் கொரோனா பரிசோதனை 10 கோடியை தாண்டியது- ஐசிஎம்ஆர் தகவல்


இந்தியாவில் கொரோனா பரிசோதனை 10 கோடியை தாண்டியது- ஐசிஎம்ஆர் தகவல்
x
தினத்தந்தி 23 Oct 2020 4:07 AM GMT (Updated: 23 Oct 2020 4:07 AM GMT)

இந்தியாவில் இதுவரை செய்யப்பட்ட கொரோனா பரிசோதனை எண்ணிக்கை 10 கோடியை தாண்டியுள்ளது.

புதுடெல்லி,

உலக நாடுகளை உலுக்கி வரும் கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த  பரிசோதனைகளை நடத்த வேண்டும் என்று  உலக சுகாதார அமைப்பு வலியுறுத்தியது. 

இதனால்,  தொற்று பாதித்தவர்களை கண்டறிதல், சிகிச்சை அளித்தல் தடம் அறிதல் ஆகியவற்றை இலக்காகக் கொண்டு இந்தியாவில்  கொரோனா பரிசோதனை அதிகரிக்கப்பட்டது. சராசரியாக தினமும் 10 லட்சத்திற்கும் அதிகமான மாதிரிகள் இந்தியாவில் கடந்த பல  வாரங்களாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

இந்த நிலையில், இந்தியாவில் இதுவரை செய்யப்பட்ட கொரோனா பரிசோதனை எண்ணிக்கை 10 கோடியை தாண்டியுள்ளது. நேற்று ஒரு நாளில் மட்டும் 14,42,722- கொரோனா மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக  இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது.  இந்தியாவில் மேற்கொள்ளப்பட்டும் தீவிர பரிசோதனைகளால் கடந்த சில வாரங்களாக தொற்று பரவல் வேகம் குறைந்து வருகிறது. 

Next Story