“பீகாரில் 10 லட்சம் பேருக்கு அரசு வேலை” - ராஷ்ட்ரீய ஜனதா தளம் தேர்தல் அறிக்கை வெளியீடு + "||" + "Government jobs for 10 lakh people in Bihar" - Rashtriya Janata Dal election statement released
“பீகாரில் 10 லட்சம் பேருக்கு அரசு வேலை” - ராஷ்ட்ரீய ஜனதா தளம் தேர்தல் அறிக்கை வெளியீடு
பீகார் சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடும் ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சி தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது.
பாட்னா,
பீகார் மாநிலத்தில் சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், தற்போது தேர்தல் பிரச்சார களம் சூடு பிடித்துள்ளது. பாஜக சார்பில் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் உள்ளிட்ட அமைச்சர்கள் தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளனர். அதனை தொடர்ந்து தற்போது பீகார் சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடும் ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சி தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது.
இதனை, அக்கட்சியின் முதல்வர் வேட்பாளர் தேஜஸ்வி யாதவ் வெளியிட்டார். தேர்தல் அறிக்கையை வெளியிட்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பீகார் மாநில மக்களுக்கு, 10 லட்சம் அரசு வேலை வாய்ப்பு வழங்கப்படும் என்று உறுதி அளித்தார். வாக்குறுதியின் பொருட்டு ஒரு கோடி வேலைகளை உறுதி அளித்திருக்க முடியும் என்றாலும் நாங்கள் அதனை செய்யவில்லை என்று தேஜஸ்வி யாதவ் கூறியுள்ளார்.