உயரதிகாரியின் அனுமதி இன்றி தாடி வளர்த்த போலீசார் மீது சஸ்பெண்டு நடவடிக்கை
உத்தர பிரதேசத்தில் அனுமதி இன்றி தாடி வளர்த்து சஸ்பெண்டு செய்யப்பட்ட போலீசார் மீண்டும் பணியில் சேர்க்கப்பட்டு உள்ளார்.
பாக்பத்,
உத்தர பிரதேசத்தின் பாக்பத் மாவட்டத்தில் ரமலா காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளர் அந்தஸ்தில் பணிபுரிந்து வருபவர் இந்திஜார் அலி. இவர் உயரதிகாரியின் முன் அனுமதியின்றி தாடி வளர்த்துள்ளார்.
இதனால், அவரை தாடியை மழிக்கும்படி போலீஸ் சூப்பிரெண்டு கூறியுள்ளார். ஆனால் 3 முறை கூறியும் உயரதிகாரியின் உத்தரவை அவர் ஏற்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் ஒழுங்கீன நடவடிக்கையாக கடந்த 20ந்தேதி அலி சஸ்பெண்டு செய்யப்பட்டார். கடந்த சில நாட்களாக இது விவாத பொருளாக இருந்து வந்தது.
இந்நிலையில், அலி தனது தாடியை மழித்து உள்ளார். இதுபற்றி தனது உயரதிகாரியிடம் விண்ணப்பம் வழியே தெரிவித்து உள்ளார். இதனை தொடர்ந்து, அவரை மீண்டும் பணியில் சேர்ப்பதற்கான உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டன. இதன்பின்பு அவர் மீண்டும் தன்னுடைய பணியில் சேர்ந்துள்ளார். இதனை சிங் செய்தியாளர்களிடம் உறுதிப்படுத்தி உள்ளார்.
உயரதிகாரியின் முன் அனுமதியின்றி தாடி வளர்த்ததற்காக சஸ்பெண்டு செய்யப்பட்ட போலீசார், தாடியை மழித்ததும் மீண்டும் பணியில் சேர்க்கப்பட்டு உள்ளது மீண்டும் விவாதத்திற்கு உள்ளானது.
Related Tags :
Next Story